ஒரு சமயம் குபேரன் பார்வதியால் சபிக்கப்பட்டதால் தனது நவநிதிகள் அனைத்தையும் இழந்தான். நவநிதிகள் தங்களைக் காக்கும்படி பகவானை வேண்ட, அவர் அவைகளைக் காத்து, மீண்டும் குபேரனிடமே ஒப்படைத்ததாக ஐதீகம். அதனால் பெருமாள் 'நிக்ஷேபவித்தன்' (வைத்தமாநிதி) என்ற திருநாமம் பெற்றார்.
மூலவர் வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் குமுதவல்லி, கோளூர்வல்லி ஆகிய திருநாமங்களால் வணங்கப்படுகின்றார். குபேரன், மதுரகவி ஆழ்வாருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று. மதுரகவி ஆழ்வார் அவதார ஸ்தலம்.
குபேரன் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். இது ஒரு பிரார்த்தனைத் ஸ்தலமும் ஆகும். பொருளை இழந்தவர்கள் இங்குள்ள பெருமாளை வேண்டிக் கொண்டால் இழந்ததைப் பெறுவர் என்பது நம்பிக்கை.
நம்மாழ்வார் 12 பாசுரங்கள் பாடியுள்ளார். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
|